/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலுநாச்சியார் இயக்கம் எம்.எல்.ஏ.,விற்கு பாராட்டு
/
வேலுநாச்சியார் இயக்கம் எம்.எல்.ஏ.,விற்கு பாராட்டு
ADDED : ஆக 10, 2024 05:03 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் ராணி வேலுநாச்சியாருக்கு சிறப்பு செய்ய பேசிய ராமலிங்கம் எம்.எல்.ஏ.,க்கு வேலுநாச்சியார் இயக்கம்பாராட்டு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை மானிய கோரிக்கையின் போது, ராமலிங்கம் எம்.எல்.ஏ., விடுதலை போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியாரின் பெயரை மத்திய அரசு துக்ளக்காபாத்தில் ரயில், தெற்கு கடலோரப்படை கப்பல், அமராவதி சைனிக் ராணுவப் பள்ளியின்'பெண்கள் விடுதி, மதுரை விமான நிலையத்திற்கு சூட்டி சிறப்புசெய்துள்ளது.
தமிழ்நாட்டில் வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம், சென்னை காந்தி மண்டபத்தில் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, விடுதலை போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியாருக்கு, புதுச்சேரியிலும் சிறப்புச் செய்யும் விதமாக அவருக்கு சிலை அமைத்து, முக்கியமான சாலை மற்றும் பள்ளிக்கு அவரது பெயர், அவரது பிறந்த நாளை பெண்கள் எழுச்சி நாளாக அரசு விழா எடுக்க வேண்டுமென பேசினார்.
அவருக்கு வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கலைவரதன் பாராட்டி, நன்றி தெரிவித்துள்ளார்.

