/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி குமாரபாளையம், வீராம்பட்டினம் அணிகள் வெற்றி
/
பிரிமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி குமாரபாளையம், வீராம்பட்டினம் அணிகள் வெற்றி
பிரிமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி குமாரபாளையம், வீராம்பட்டினம் அணிகள் வெற்றி
பிரிமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி குமாரபாளையம், வீராம்பட்டினம் அணிகள் வெற்றி
ADDED : ஆக 26, 2024 05:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 லீக் மற்றும் நாக்கவுட் கிரிக்கெட் போட்டி, புதுச்சேரி போலீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த 3வது போட்டியில், உப்பளம் ராயல்ஸ், குமாரபாளையம் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உப்பளம் ராயல்ஸ் அணி 15 ஓவர்களில் அனைத்துவிக்கெட்களையும் இழந்து 90 ரன்கள் எடுத்தது. மூர்த்தி 28 ரன்கள் எடுத்தார். குமாரபாளையம் வாரியர்ஸ் அணியின் சோமு 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து ஆடிய குமாரபாளையம் வாரியர்ஸ் அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணிகண்டன் 45 ரன்கள் எடுத்தார். குமார பாளையம் வாரியர்ஸ் அணியின் சோமு ஆட்டநாயகன் விருது பெற்றார்.
4வது போட்டியில், வீராம்பட்டினம் ஷார்க்ஸ், உருளையன்பேட் டைகர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய உருளை யன்பேட் டைகர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பாலாஜி 56, சுப்புரத்தினம் 49 ரன்கள் எடுத்தனர். வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி பூபதி 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய் 67, நெல்சன் 45 ரன்கள் எடுத்தனர். வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி பூபதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் கணேஷ், முகிலன், குமாரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக நடந்த போட்டிகளில் மணிமாறன், சபரி ஆகியோர் ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.