/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
கன்னி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 21, 2024 05:31 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார் தோட்டம் கன்னி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, பாலவிநாயகர், பாலமுருகர், கன்னியம்மன், சப்த கன்னிகள், மதுரைவீரன் பொம்மி, குரு தட்சணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை அம்மன் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன.
சாமிகளுக்கு, நேற்று காலை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மாலை வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பிரவேசம், மண்டப அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, இன்று 21ம் தேதி கோ பூஜை, இரண்டாம் கால பூஜை, சூரிய பூஜை, மூலமந்திர ஜெப ேஹாமம், நடக்கிறது. காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் கன்னி அம்மன் மூலஸ்தான விமானத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது.

