/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புட்லாய் மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
புட்லாய் மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 21, 2024 05:20 AM
வில்லியனுார்: ஆரியப்பாளையம் புட்டலாய் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை நடக்கிறது.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையம் கிராமத்தில் அமைத்துள்ள புட்டலாய் மாரியம்மன் கோவிலில் பொய்யாமொழி விநாயகர், கெங்கையம்மன், எல்லையம்மன், பால விநாயகர், பாலமுருகன், தஷ்ணாமூர்த்தி, துர்க்கையம்மன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.
இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிேஷக விழா கடந்த 19ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அன்று மாலை முதல் கால யாக பூஜை, நேற்று காலை இரண்டாம் கால பூஜை, மாலையில் மூன்றாம் கால யூஜை நடந்தது.
இன்று (21ம் தேதி) காலை 6:00 மணியளவில் நான்காம் கால பூஜை, 8:45 மணியளவில் கடம் புறப்பாடு, காலை 9:05 மணியளவில் பொய்யாமொழி விநாயகருக்கு மகா கும்பாபிேஷகம், காலை 9:15 மணிக்கு கெங்கையம்மனுக்கும், 9:35க்கு எல்லையம்மனுக்கும், 10:05 மணிக்கு புட்டலாய் மாரியம்மனுக்கும் மகா கும்பாபிேஷகமும், தீபாராதனை நடக்கிறது.
இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிேஷக விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று தரிசனம் செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

