/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.மாத்துார் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்
/
வி.மாத்துார் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 18, 2024 11:45 PM

திருக்கனுார் : வி.மாத்துார் திரவுபதியம்மன், பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 21ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், வி.மாத்துார் கிராமத்தில் திரவுபதியம்மன், பிடாரியம்மன், மழுவேந்தியம்மன், கெங்கையம்மன் கோவில் மற்றும் சிவராம சுவாமி மடம் உள்ளது. இக்கோவிலில், புதிதாக மகா விஷ்ணு, பஞ்ச பாண்டவர் சிலைகள் அமைக்கப்பட்டு, கும்பாபிேஷகம் வரும் 21ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்கியது. இன்று (19ம் தேதி) காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷபந்தனம், முதல் கால யாக பூஜை நடக்கிறது. நாளை (20ம் தேதி) காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.
21ம் தேதி காலை 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 6:30 மணிக்கு திரவுபதியம்மன், பிடாரியம்மன், கெங்கையம்மன், மழுவேந்தியம்மன், சிவராம சுவாமி மடம் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

