ADDED : ஆக 03, 2026 05:53 PM
பாகூர்: கூலித் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 43; கூலித் தொழிலாளி. இவரது மனைவி கோமதி 40; இவர் அங்குள்ள பால் பூத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.மது பழக்கத்திற்கு ஆளான ஆறுமுகத்தின் சிறுநீரகம் செயலிழந்து, சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவர்கள் அவரை மீண்டும் மது குடிக்க கூடாது என அறிவுருத்தி இருந்தனர்.
ஆனால், அவர், மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று வீட்டில் தனியாக இருந்த ஆறுமுகம் புடவையால் துாக்கிட்டு கொண்டு தரையில் அமர்ந்த நிலையில் இருந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரது மகன்கள் அவரை மீட்டு பாகூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கோமதி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
