/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
/
கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 04, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த வாதானுார் குட்டை தெருவை சேர்ந்தவர் தேவராசு,50; கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி. சில ஆண்டிற்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில், பேபி இறந்தார். இதனால், இவரது மகன் புஷ்பராஜ், பனப்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில், தனிமையில் வசித்து வந்த தேவராசு, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.