நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: திருமண ஏக்கத்தில் கூலி தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
காரைக்கால் கீழகாசாகுடி வேட்டைக்காரன் மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் முருகேசன்,35; கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து சரியாக அமையவில்லை. இதனால் மனமுடைந்த முருகேசன், கடந்த 28 ம் தேதி வெளியூர் வேலைக்கு சென்ற முருகேசன் வீட்டுக்கு வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் முருகேசனை தேடியுள்ளனர். அப்போது பணங்கரை வாய்க்கால் பகுதியில் உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது.
கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.