/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூலி தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
/
கூலி தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
ADDED : செப் 04, 2024 11:04 PM
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம், அன்னை ராணி தெருவை சேர்ந்தவர் ராஜாராம், 46; கூலி தொழிலாளி.
இவர் கடந்த 1ம் தேதி தனது பைக்கில் தமிழகப் பகுதியான கொண்டலாங்குப்பம் சென்றார். அப்போது, முன்னாள் சென்ற காரை ராஜாராம், முந்தி செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால், ராஜாராம் மற்றும் காரில் சென்றவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ராஜாராம் வானுார் போலீசில் புகார் அளிக்க போவதாக கூறினார்.
இந்நிலையில், கொண்டலாங்குப்பம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த சாந்தகுமார், 34; காட்டேரிக்குப்பம் இளங்குமரன், 29; ஆகியோர் ராஜாராம் வீட்டிற்கு சென்று அவரது தாய் அனுசுயாவிடம், உனது மகன் எங்கே என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அனுசுயா அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.