/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் நாளை விளக்கு பூஜை
/
முத்தாலம்மன் கோவிலில் நாளை விளக்கு பூஜை
ADDED : மே 08, 2024 11:57 PM
பாகூர் : பாகூர் முத்தாலம்மன் கோவிலில், அக்ஷய திருதியை முன்னிட்டு, நாளை (10ம் தேதி) விளக்கு பூஜை நடக்கிறது.
பாகூரில் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வராகி அம்மன் தனி சன்னதியில், அக்ஷய திருதியை முன்னிட்டு, நாளை (10ம் தேதி) விளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதனை தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு விளக்கு பூஜையும் நடக்கிறது.
இரவு 8.00 மணிக்கு மகா தீபாரதனை நடக்கிறது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று குத்து விளக்கேற்றி, உலக நன்மை வேண்டி, அம்மனை வழிபாடு செய்ய உள்ளனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் செய்துள்ளனர்.