
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சமரச ராமானுஜர் பஜனை படத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
முருங்கப்பாக்கம் சமரச ராமானுஜர் பஜனை மடம் உள்ளது. அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டாள் அவதார தினத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை கலச பூஜை, தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு திருமஞ்னம் மற்றும் பஜனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிப்பட்டனர். ஏற்பாடுகளை சமரச ராமானுஜ பஜனை மட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.