/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேரிடர் காலத்தில் நிலங்களை பாதுகாத்தல் பயிற்சி முகாம்
/
பேரிடர் காலத்தில் நிலங்களை பாதுகாத்தல் பயிற்சி முகாம்
பேரிடர் காலத்தில் நிலங்களை பாதுகாத்தல் பயிற்சி முகாம்
பேரிடர் காலத்தில் நிலங்களை பாதுகாத்தல் பயிற்சி முகாம்
ADDED : மார் 04, 2025 04:34 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் உழவர் உதவியகம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், பேரிடர் காலங்களில் விவசாய நிலத்தை பாதுகாத்தல் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
சுத்துக்கேணியில் நடந்த முகாமிற்கு, வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் நிபுணர் மணிமேகலை, பேரிடர் காலங்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பேசினார். மண்ணியல் நிபுணர் பிரபு, நிலத்தை பாதுகாத்தல் மற்றும் வடிகால் வசதி செய்வது, உரம் மற்றும் இயற்கை மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்.
இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், களப்பணியாளர்கள் ஆதிநாராயணன், ஏழுமலை செய்திருந்தனர். வட்டார மேலாளர் குமரன் நன்றி கூறினார்.