/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காளம்மன் கோவிலில் விளக்கு பூஜை
/
அங்காளம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED : ஆக 19, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சின்னசுப்பராயப்பிள்ளை வீதி அங்காளம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
புதுச்சேரி, சின்னசுப்புராயப் பிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை முன்னிட்டு கோவிலில் விளக்கு பூஜை நேற்று நடந்தது.
இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் விளக்கு ஏற்றி சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் செய்திருந்தனர்.

