நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முன்னாள் ராணுவ அதிகாரி வீட்டில் லேப்டாப், மொபைல் போன் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி குயவர்பாளையம் கிருஷ்ணசாமி கார்டனை சேர்ந்தவர் கதிர்வேல் 53, முன்னாள் ரானுவ அதிகாரி. இவர் நேற்று தமிழ்புத்தாண்டை யொட்டி அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டு மனக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றார்.
பின் வீட்டிற்கு வந்த பார்த்தபோது கதிர்வேல் லேப்டாப், ஐ போன் காணவில்லை, இதையடுத்து அவரது வீட்டில் இருந்த சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்ததில் வாலிபர் ஒருவர் லேப்டாப் பேக்கை காலை 6.00 மணியளவில் வீட்டில் இருந்து திருடி சென்றது தெரியவந்தது.
லேப்டாப் பேக்கில் லேப்டாப், ஐபோன், மோடம் உள்ளிட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருளை திருடிச் சென்றுள்ளார்.
கதிர்வேல் புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து திருடனை தேடி வருகின்றனர்.

