/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டம் ஒழுங்கு போலீசார் தினசரி கட்டாய வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்
/
சட்டம் ஒழுங்கு போலீசார் தினசரி கட்டாய வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்
சட்டம் ஒழுங்கு போலீசார் தினசரி கட்டாய வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்
சட்டம் ஒழுங்கு போலீசார் தினசரி கட்டாய வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்
ADDED : செப் 01, 2024 04:10 AM

புதுச்சேரி, : சட்டம் ஒழுங்கு போலீசார் தினசரி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை கட்டாய வாகன சோதனை செய்ய சீனியர் எஸ்.பி., அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் ரவுடிகளை ஒழிக்க ஆப்ரேஷன் திரிசூல் மூலம் ரவுடிகள் வீடுகளில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த தொடர் கண்காணிப்பால் ரவுடிகளின் அடாவடி செயல்பாடுகள் சற்று குறைந்துள்ளது.
இந்த நிலையில் கஞ்சா கடத்தல், பைக் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது.
இதனை தடுக்கவும், முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை உறுதி செய்யும் வகையில், காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை சட்டம் ஒழுங்கு போலீசார் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில் கட்டாயம் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.
குறைந்தது ஒரு நாளைக்கு 35 வாகனங்களை சோதனை செய்து, ஆவணங்கள் சரியாக உள்ளதா, கஞ்சா கடத்தப்படுகிறதா, ஒரே பைக்கில் மூவர் பயணிக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும் என சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சட்டம் ஒழுங்கு போலீசார் ஆங்காங்கே திடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆவணங்கள் சரிபார்ப்பு, கஞ்சா கடத்தல் உள்ளிட்டவை ஆய்வு செய்து, ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி ஸ்பாட் பைன் விதித்து சலான் வழங்கப்படுகிறது.