/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : ஆக 24, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொல்கட்டா மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் ஆம்ஸ்ட்ராங், உதயக்குமார், சரவணன்ராஜா படுகொலை செய்யப்பட்டது, மேற்கு வங்காளம் கொல்கட்டாவில் மருத்துவ கல்லுாரி மாணவி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடந்தது.
சங்க நிர்வாகிகள் வழக்கு விசாரணையில் பங்கேற்காமல், நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் ஓய்வு அறையில் அமர்ந்திருந்தனர்.