/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதிர்க்கட்சி தலைவர் சிவா வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு
/
எதிர்க்கட்சி தலைவர் சிவா வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு
எதிர்க்கட்சி தலைவர் சிவா வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு
எதிர்க்கட்சி தலைவர் சிவா வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 07, 2024 04:28 AM

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில், காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உருளையன்பேட்டை தொகுதியில், கூட்டணி கட்சிகள் சார்பில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் பணி நடந்தது.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சிவா, பொதுக்குழு உறுப்பினர் கோபால் முன்னிலையில் பிரசாரத்தை துவக்கி வைத்தார்.திராவிட மாடல் அரசின் திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் கொண்டு வருவதற்கு, 'கை' சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும். என, பிரசாரம் செய்தார்.
வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றி பெறச் செய்தால், தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரிக்கான தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது போல் மாநில அந்தஸ்து பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.பிரசாரத்தில் தி.மு.க, - காங்., வி.சி., கம்யூ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்உடன் இருந்தனர்.

