ADDED : ஜூலை 15, 2026 07:31 PM

கடலுார்: கடலுார் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
கடலுார் அடுத்த தென்னம்பாக்கம்–கம்பளிகாரக்குப்பம் சாலையில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், வன அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமையில், வனவர் திலக்ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தகவல் கூறப்பட்ட கரும்பு தோட்டத்தில் வித்தியாசமாக காணப்பட்ட கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதில், காட்டுப்பூனையின் கால் தடம் எனவும், சிறுத்தையின் கால்தடம் இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். மெலும், இப்பகுதியில் ஏதேனும் விலங்குகள் சுற்றிந்திரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு கிராம மக்களிடம் வனத்துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும், அப்பகுதி மக்களிடையே பீதி குறையவில்லை.
