/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 15, 2025 05:51 AM

புதுச்சேரி : புதுச்சேரி நலவழித்துறை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தட்டாஞ்சாவடி, சேக்கிழார் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் முருகன் வரவேற்றார். கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா, தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினர்.
பெண் சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி முன்னிலை வகித்தார்.
சுகாதார ஆய்வாளர் லியோனா, தொழுநோய் குறித்து விளக்கம் அளித்தார். சுகாதார உதவியாளர் சிவக்குமார் தொழுநோய் பரவும் விதம், கண்டறியும் முறை, சிகிச்சை குறித்து பேசினார். சுகாதார உதவியாளர் ஜெகநாதன் தொழுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார்.
முன்னதாக, மாணவர்களுக்கு இடையே வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிராமப்புற செவிலியர் தனலட்சுமி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆஷா ஊழியர் விருதாம்பாள், வெற்றிசெல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.

