
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நெட்டப்பாக்கம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள 75 அடிய உயர கம்பத்தில் துணை சபாநாயகர் ராஜவேலு தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்., ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.