/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல்
/
கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல்
கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல்
கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 15, 2024 11:33 PM

புதுச்சேரி: கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாராற்று கிடந்த பையில் இருந்த மதுபாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதியம் 1:00 மணிக்கு, கச்சிகுடா புறப்பட தயாராக இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது.
பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் 750 மி.லீ., அளவுள்ள 26 மதுபாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 10 ஆயிரம். ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ரயிலில் மதுபாட்டில் கடத்த முயன்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.