/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடை கேஷியர் கொலை: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை காரைக்கால் கோர்ட் தீர்ப்பு

ADDED : ஆக 13, 2024 04:49 AM

காரைக்கால்: சாராயக்கடை கேஷியரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு செல்லுார் அகலங்கண்ணு சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,48; சாராயக்கடை கேஷியரான இவர், கடந்த 2020ம் ஆண்டு செப்.,12ம் தேதி தனது வீட்டின் முன் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது செல்லுாரை சேர்ந்த செல்வேந்திரன் மகன் மகேந்திரன்,22; அவரது நண்பர் ஜெயபாலாஜி,19; ஆகிய இருவரும் குடிபோதையில் பைக்கில் வேகமாக சென்றனர். அதனை ரவிச்சந்திரன் கண்டித்தார்.
ஆத்திரமடைந்த மகேந்திரன், ஜெயபாலாஜி ஆகியோர் தாக்கியதில் மயங்கி விழுந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் மனைவி விஜயா புகாரின் பேரில், மகேந்திரன் மற்றும் ஜெயபாலாஜியை கைது செய்த காரைக்கால் போலீசார், இருவர் மீதும் காரைக்கால் கோர்ட்டில் கொலை வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், கொலை வழக்கை நோக்கமில்லா கொலை பிரிவில் மாற்றம் செய்து, மகேந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
ஜெயபாலாஜி விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மகேந்திரன், புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.