/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டோக்கன் மூலம் மது, பெட்ரோல் தேர்தல்துறை தீவிர கண்காணிப்பு
/
டோக்கன் மூலம் மது, பெட்ரோல் தேர்தல்துறை தீவிர கண்காணிப்பு
டோக்கன் மூலம் மது, பெட்ரோல் தேர்தல்துறை தீவிர கண்காணிப்பு
டோக்கன் மூலம் மது, பெட்ரோல் தேர்தல்துறை தீவிர கண்காணிப்பு
ADDED : மார் 23, 2024 11:30 PM
புதுச்சேரி: டோக்கன் வாங்கி கொண்டு பெட்ரோல், மது பாட்டீல்கள் தர கூடாது என தேர்தல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
புதுச்சேரியில் பிரதான கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் திருவிழா களை கட்டியது. ஓட்டு பதிவு முடியும் வரை கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கும் வெய்யலுக்கு இதமாக தாக சாந்திக்கு மதுவும், வாகன போக்குவரத்திற்கு பெட்ரோல் வழங்கி அவர்களை கடைசி வரை உற்சாகப்படுத்தும் வித்தையை அரசியல் கட்சிகள் கையாளும்.
பறக்கும் படை, கண்காணிப்புக் குழுவினர் தீவிர ரோந்துவை மீறி சரக்குகளை மொத்தமாக வாங்கி செல்ல வேண்டும். இது சிக்கலை ஏற்படுத்தி, வேட்பாளர் கணக்கில் சேர்ந்துவிடும் என்பதால் தொண்டர்களின் வாகனங்களுக்கு பெட்ரோலும், மதுவிற்கு டோக்கன் வழங்குவர். இந்த முறை, வாக்காளர்களுக்கு கொடுக்கும் டோக்கனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்துள்ள, தேர்தல் துறை முன் கூட்டிய களம் இறங்கியுள்ளது. பெட்ரோல் பங்க், பார்கள் முழுவதையும் ஆய்வு செய்துள்ள தேர்தல் துறை வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் பெட்ரோல், மது வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து, தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வருகிறது.

