sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மதுபான கொள்கை விவகாரம்: அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்

/

மதுபான கொள்கை விவகாரம்: அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்

மதுபான கொள்கை விவகாரம்: அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்

மதுபான கொள்கை விவகாரம்: அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்


ADDED : ஆக 13, 2024 05:01 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதிய மதுபான தொழிற்சாலை துவக்க அனுமதி அளித்தது தொடர்பாக சட்டசபையில் அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசுகையில்;

புதிதாக 7 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளீர்கள். ஒரு கேஸ் மது தயாரிக்க 5 லிட்டர் தண்ணீர் தேவை. நீங்கள் 7 லட்சம் கேஸ் மது உற்பத்திக்கு தண்ணீர் கொடுக்க போகிறீர்கள் என்றால், தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும்.

பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ.; குடிநீரில் டி.டி.எஸ்., அளவு அதிகரித்து விட்டதால், குடிக்க தண்ணீர் இல்லை. மின்சாரம் தட்டுப்பாடும் இருக்கிறது. பல பிரச்னைகள் வைத்து கொண்டு புதுச்சேரிக்கு மதுபான தொழிற்சாலை தேவையா.

நேரு எம்.எல்.ஏ.; மதுபான தொழிற்சாலைகள் சொந்தமாக ஒரு பிராண்டு மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்தால், குறைவாக தண்ணீர் எடுப்பார்கள்.

ஆனால், இங்குள்ள தண்ணீரை உறிஞ்சி மற்ற மாநில முன்னணி பிராண்டு மதுபானங்களை தயாரித்து விற்க வருகிறார். 2001 முதல் தண்ணீர் எடுக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்ற கொள்கை உள்ளது.

வருவாய் அதிகரிக்க எந்த தொழிலும் வரவில்லை. ஆனால் வருவாய் எடுத்து கொண்டு செல்லும் தொழிற்சாலைகளுக்கு ஏன் அனுமதி கொடுக்கிறீர்கள்.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்; வெளிமாநிலத்தில் இருந்து மதுபான மூலப்பொருள் வாங்கி வந்து அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்ய போகிறார்கள். இதனால் வருவாய் வரும்.

நேரு எம்.எல்.ஏ.; தொழிற்சாலை வேண்டாம் என்று கூறவில்லை. நல்ல தொழிற்சாலைகளை கொண்டு வாருங்கள். மதுபான தொழிற்சாலையால் வருமானம் வரபோவதில்லை. மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற பிரச்னையால் ஒரு மாநில முதல்வரே சிறையில் உள்ளார்.

அதை மறந்துவிடாதீர்கள். உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஊழல் செய்யாதீர்கள். லஞ்சம் வாங்காதீர்கள். நீங்கள் அமைச்சராக இருக்கலாம். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை மறக்காதீர்கள் என கூறினார்.

அப்போது, அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கும், நேரு எம்.எல்.ஏ.,வுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. நேருவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சிவா, அங்காளன், கல்யாணசுந்தரம் எழுந்து நின்று மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தர கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us