/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை பகுதியில் மதுபானங்கள் பறிமுதல்
/
லாஸ்பேட்டை பகுதியில் மதுபானங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 18, 2024 11:32 PM

புதுச்சேரி : புதுச்சேரியில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கிய மது பாட்டில்கள் கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. ஓட்டுப் பதிவு மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த 16ம் தேதி இரவு மதுபான கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மதுபான கடைகள் மூடப்பட்டாலும், தடையை மீறி பல இடங்களில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.
தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தி மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் லாஸ்பேட்டை செயின்ட்பால்பேட் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 856 லிட்டர் அளவுள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 1.97 லட்சம்.
நேற்று காலை அதே பகுதி வண்ணாத்தார் வீதியில் பணம் விநியோகிக்கப்படுவதாக தகவல் வந்தது. பறக்கும்படை அதிகாரி கணேஷ், உதவி சப்இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான அதிகாரிகள் சென்றபோது, பாழடைந்த வீடு ஒன்றில் 361 குவாட்டர் மதுபாட்டில்கள், 9 பீர் பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டது.

