/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுபான கடையில் தகராறு: போலீஸ் உட்பட 8 பேர் மீது வழக்கு
/
மதுபான கடையில் தகராறு: போலீஸ் உட்பட 8 பேர் மீது வழக்கு
மதுபான கடையில் தகராறு: போலீஸ் உட்பட 8 பேர் மீது வழக்கு
மதுபான கடையில் தகராறு: போலீஸ் உட்பட 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 17, 2024 06:19 AM
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு மதுபான கடையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ஐ.ஆர்.பி.என்., போலீஸ் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்த கதிரவன், 41; ஐ.ஆர்.பி.என் போலஸ். இவர் தற்போது உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு வாகன டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள மதுபான கடையில் தனது நண்பரான கூனிச்சம்பட்டை சேர்ந்த ஆனந்த்துடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது செட்டிப்பட்டு ராஜா தெருவை சேர்ந்த சக்திவேல்,மேட்டு தெருவை சேர்ந்த காளிதாஸ் ஆகியோரும் அங்குமது அருந்தி உள்ளனர்.
குடிபோதையில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டுள்ளனர். இதையறிந்த கூனிச்சம்பட்டை சேர்ந்த அருள், மற்றொரு நபர் கதிரவனுக்கு ஆதரவாக சக்திவேல் மற்றும் காளிதாசை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும்,சக்திவேலுக்கு ஆதரவாக செட்டிப்பட்டை சேர்ந்த பார்த்திபன், மற்றொரு நபரும் மதுபான கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், காயமடைந்த இரு தரப்பினரும் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திருக்கனுார் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதில்,சக்திவேல் அளித்த புகாரின் பேரில் ஐ.ஆர்.பி.என் போலீசார் கதிரவன், கூனிச்சம்பட்டை சேர்ந்த அருள், ஆனந்த் மற்றும் ஒருவர் மீதும், கதிரவன் அளித்த புகாரின் பேரில் சக்திவேல், காளிதாஸ், பார்த்திபன் மற்றும் ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்துறை அமைச்சரின் பாதுகாப்பு வாகன டிரைவராக பணியாற்றி வரும் ஐ.ஆர்.பி.என்., போலீசார் குடிபோதையில் அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.