/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
25 புதிய விளையாட்டுகளின் பட்டியல் வெளியீடு
/
25 புதிய விளையாட்டுகளின் பட்டியல் வெளியீடு
ADDED : ஜூன் 01, 2024 04:19 AM
புதுச்சேரி, : தினமலர் செய்தி எதிரொலியாக உயர் கல்வி இட ஒதுக்கீட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள 65 விளையாட்டுகளின் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் 40 வகையான விளையாட்டுகள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு முதல் உயர் கல்வியில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
புதுச்சேரியில் பல புதிய விளையாட்டுகள் விளையாடும் சூழ்நிலையில் அவற்றையும் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதையடுத்து மத்திய இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தினை பின்பற்றி காலத்துகேற்ப இட ஒதுக்கீடு அளிக்கப்படும் விளையாட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்து கோப்பு அனுப்பியது. ஆனால் அதிகரிக்கப்பட்ட 65 விளையாட்டுகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.
அவ்விளையாட்டுகளில் இந்தாண்டு இட ஒதுக்கீடு உண்டா என்று குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து உயர் கல்வி சேர்க்கைக்காக அதிகரிக்கப்பட்டுள்ள 65 விளையாட்டுகளின் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக 25 விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய விளையாட்டில் சாதித்த மாணவர்கள் வரும் 10ம் தேதிக்குள் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.
புதிய விளையாட்டு
பேஸ்பால், பாடி பில்டிங், சைக்கிள் போலோ, செவித்திறன் குன்றியவர்கள் விளையாட்டுகள், பென்சிங், ஐஸ் ஹாக்கிங், ஐஸ் ஸ்கேட்டிங், பனிசறுக்கு, கூடோ, மல்லர்கம்பம், மோட்டார் விளையாட்டு, நெட் பால், பாரா விளையாட்டு, பென்கேக் சிலாட், ஸ்சூட்டிங்பால், ரோல்பால், ரக்பி, செபக் தக்ரா, சாப்ட் டென்னிஸ், டென்பின் பவுலிங், டிரையத்லான், டக் ஆப் வார் (கயிறு இழுக்கும்போட்டி), பராம்பரிய சீனாவின் வுசூ விளையாட்டு, டென்னிஸ்பால் கிரிக்கெட், யோகாசனம்.