ADDED : ஜூன் 19, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் புதுச்சேரி உட்பட 12 மையங்களில் நடத்துகிறது.
ஸ்ரீராம் இலக்கிய கழகம், ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துகிறது.
ஜூலை 26ம் தேதி மறைமலை அடிகள் சாலையிலுள்ள செயின்ட் ஆண்டனிஸ் உயர்நிலைப் பள்ளியில் நடக்கிறது. 6–8ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைநிலை பிரிவிலும், 9வது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மேல்நிலை பிரிவு, கல்லுாரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது.
