/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்லீரல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : மே 21, 2024 05:05 AM

புதுச்சேரி: கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக கல்லீரல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரசு நலவழித்துறை தேசிய வைரஸ் கல்லீரல் நோய் கட்டுப்பாட்டு திட்டம் சார்பில் உலக கல்லீரல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.
கிராமப்புற செவிலியர் வனிதா வரவேற்றார்.டாக்டர் மதுமிதா, பெண் சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா சிறப்புரையாற்றினார்.
கல்லீரல் நோய் உண்டாவதற்கான காரணிகள், கல்லீரல் நோய் வராமல் தடுப்பதற்கான முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர் ஜெகநாதன், ஆஷா ஊழியர்கள் ரேணுகா,விருதாம்பாள் செய்திருந்தனர். சுகாதார உதவியாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.