/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுமை துாக்குவோர் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம்
/
சுமை துாக்குவோர் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டம்
ADDED : ஜூன் 30, 2024 11:15 PM

புதுச்சேரி : ஏ.ஐ.டி.யூ.சி., சுப்பையா சுமை தூக்குவோர் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யூ.சி., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
செயலாளர் தயாளன், பொதுச் செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சித்தானந்தம், தமிழ் குமரன், குமார், முருகன், மணிகண்டன், ராமு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில், அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்புமின்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நல சங்கத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நல சங்கத்தை நலவாரியமாக மாற்ற வேண்டும் என, பல முறை கோரிக்கை வைத்தன் பேரில், அரசு நல வாரியம் அமைக்கப்படும் என, அறிவித்தது. இதுவரை செயல்படுத்தவில்லை.
போதுமான நிதி ஒதுக்கி நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இக்கோரிக்கைளை வலியுறுத்தி சட்டசபை முன், ஆர்ப்பாட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.