/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நாளை லோக் அதாலத்
/
புதுச்சேரியில் நாளை லோக் அதாலத்
ADDED : செப் 13, 2024 06:41 AM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் கோர்ட்டுகளில் நாளை லோக் அதாலத் நடக்க உள்ளதாக, மாவட்ட நீதிபதி அம்பிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கோர்ட், காரைக்கால் மாவட்ட கோர்ட் மற்றும் ஏனாம் கோர்ட் வளாகத்தில், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கும் லோக் அதாலத்தில், நிலுவையில் உள்ள மற்றும் நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது.
இதில் சமாதானமாக போகக்கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்ட ஈடு, கணவன் மனைவி பிரச்னை, குடும்ப நீதிமன்றம் மற்றும் ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில், தொழிலாளர், வங்கி கடன் சம்மந்தப்பட்ட நேரடி வழக்குகள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணலாம்.
தங்கள் வழக்குகளை சமாதானம் முறையில் தீர்த்து கொள்ள விரும்புவோர், வழக்கு நடக்கும் கோர்ட் மூலம், லோக் அதாலத்திற்கு பரிந்துரைக்குமாறு விண்ணப்பித்து வழக்குகளை, சமாதான முறையில் தீர்வு பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

