ADDED : ஆக 31, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
நோணாங்குப்பம் மேம்பாலத்தின் மீது சென்ற போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக தனியார் பஸ் டிரைவர் பிரேக் போட்டு பிஸ்சை நிறுத்தி உள்ளார். அப்போது, பின்னால் வந்த லாரியின் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நின்றிருந்த பைக் மீது மோதி பஸ்சின் பின் பக்கத்தில் இடித்து நின்றது.
இதில், பைக்கில் சென்ற வர் அதிஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினார். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.