தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை கத்தியால் வெட்டிய பாசக்கார கணவருக்கு வலை

மனைவியை கத்தியால் வெட்டிய பாசக்கார கணவருக்கு வலை

மனைவியை கத்தியால் வெட்டிய பாசக்கார கணவருக்கு வலை


ADDED : ஜூலை 05, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 23; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், லாஸ்பேட் மடுவுப்பேட் பகுதியைச் சேர்ந்த சண்முகம், 28, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களுக்கு முன் சண்முகம் மகனை அழைத்து கொண்டு லாஸ்பேட் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனியாக வீட்டில் வசித்த மனைவி தனலட்சுமியை, சண்முகம் வீட்டிற்கு அழைத்தார்.

அவர் மறுக்கவே சண்முகம் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு, தப்பியோடினார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த தனலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து சண்முகத்தை தேடி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us