ADDED : பிப் 25, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புனித எத்தியன் கிளை சபை, லுார்து கிளினிக் சார்பில் நுரையீரல் பரிசோதனை முகாம் நடந்தது.
புதுச்சேரி வெல்டர்ஹால் இருதய ஆண்டவர் பசிலிக்காவில் நடந்த மருத்துவ முகாமை, அமலோற்பவம் மேல்நிலை பள்ளி தாளாளர் லுார்துசாமி துவக்கி வைத்தார். இருதய ஆண்டவர் பசிலிக்கா பங்குத்தந்தை பிச்சைமுத்து ஆசியுரை வழங்கினார்.
பிம்ஸ் மருத்துவமனை நுரையீரல் பிரிவு தலைவர் ஆண்டோனியஸ் மரியசெல்வம் தலைமையிலான மருத்துவ குழுவினர், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து, வீசிங், மூச்சுத்திணறல், இருமல், சளி, தும்மல், ஒவ்வாமை, குறட்டை, மார்பு வலி மற்றும் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

