
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெயின்போ நகர் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிவையொட்டி தேர்பவனி நேற்று நடந்தது.
புதுச்சேரி ரெயின்போ நகர் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் தேர்பவனி நடந்து வந்தது. நேற்று ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடந்தது.
மாலை 6.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. தேர்பவனியை புதுச்சேரி-கடலுார் உயர் மறைமாவட்டம் முதன்மை குரு குழந்தைசாமி துவக்கி வைத்தார். விழாவில் திரளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.