தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மாகே, வில்லியனுார் அணிகள் வெற்றி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மாகே, வில்லியனுார் அணிகள் வெற்றி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மாகே, வில்லியனுார் அணிகள் வெற்றி


ADDED : ஜூலை 18, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மாகே, வில்லியனுார் அணிகள் வெற்றி பெற்றன.

ஸ்ரீராம் கேபிடல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லிக்கின் 3வது சீசன் துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 21வது லீக் போட்டியில்  ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணியும், மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மாகே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்தது. முதலில் பேட் செய்த ஊசுடு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரபு, ராஜசேகர், சைலஷ் வைத்தியநாதன் டக் அவுட்டாகி வெளியேறினர். ஊசுடு அக்கார்ட்ஸ் அணி 20 ஓவர்களின் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய மாகே அணி 16.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 106 ரன்க்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கரண் கண்ணன் 4 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்து, ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நேற்று முன்தினம் மாலை நடந்த 20வது லீக் போட்டியில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும், ரூபி ஒயிட் டவுன் லெஜெண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ரூபி ஒயிட் டவுன் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட் செய்த வில்லியனுார் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பின் 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய ரூபி ஒயட் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. 54 பந்துகளில் 86 ரன் எடுத்த வில்லியனுார் அணியின் பானு ஆனந்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us