/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகா குரு பூஜை விழா 6ம் தேதி நடக்கிறது
/
மகா குரு பூஜை விழா 6ம் தேதி நடக்கிறது
ADDED : மே 02, 2024 11:42 PM
வில்லியனுார் : வில்லியனுார் சத்குரு ராமபரதேசி சுவாமிகள் மகா குரு பூஜை விழா வரும் 6ம் தேதி நடக்கிறது. வில்லியனுார், எம்.ஜி.ஆர். சிலை அருகே சத்குரு ராமபரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. இங்கு சத்குரு ராமபரதேசி சுவாமிகள் 157ம் ஆண்டு மகா குரு பூஜை விழா வரும் 5ம் தேதி துவங்குகிறது. அன்று காலை சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணியளவில் ராமபரதேசி சுவாமிகள் திரு உருவப்படம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், வீதியுலா நடக்கிறது.
தொடர்ந்து 6ம் தேதி காலை 6:00 மணியளவில் அரும்பார்த்தபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆன்மிக வழிபாட்டுச் சபையினரின் பாராயணம், காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், பகல் 12:00 மணியளவில் மகா குரு பூஜை நடக்கிறது. அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணியளவில் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சத்குரு ராமபரதேசி சுவாமிகள் சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.