தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மங்கலம் தனியார் நிறுவனத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம்

மங்கலம் தனியார் நிறுவனத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம்

மங்கலம் தனியார் நிறுவனத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம்


ADDED : ஜூன் 09, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு திட்டம் மற்றும் வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரியா எதிர்ப்பு மாதத்தையொட்டி, மங்கலம் கிராமத்தில் உள்ள சூப்பர் பில் கம்பெனியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ‘மலேரியா ரத்த பரிசோதனை’ முகாம் நடந்தது.

 வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் பாமகள் கவிதை வழிகாட்டுதல் படி, நடந்த முகாமில் சுகாதார உதவி ஆய்வாளர்கள் அய்யனார், ரவிச்சந்திரன், விமல் மற்றும் கலையரசி ஆகியோர் ரத்த மாதிரிகள் சேகரித்தனர்.

சுகாதார ஆய்வாளர் இளையதாசன், மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள், காய்ச்சலின் தன்மை, பரிசோதனை, நோய்க்கான மருத்துவம் மற்றும் நோய் பரவாமல் எப்படி தடுக்கலாம் என்பது குறித்து பேசினார்.

ஏற்பாடுகளை கம்பெனி மேலாளர் இளவரசன், மனிதவள மேலாளர் சரவணன் ஆகியோர் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us