தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக பெருங்கடல் தினம்: கடற்கரையில் துாய்மை பணி

உலக பெருங்கடல் தினம்: கடற்கரையில் துாய்மை பணி

உலக பெருங்கடல் தினம்: கடற்கரையில் துாய்மை பணி


UPDATED : ஜூன் 09, 2026 09:39 PM

ADDED : ஜூன் 09, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 09:39 PM ADDED : ஜூன் 09, 2026 08:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக பெருங்கடல் தினத்தையொட்டி, கடற்கரையில் என்.சி.சி., மாணவர்கள் துாய்மை பணி மேற்கொண்டனர்.

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, கடல்வள பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், புதுச்சேரி கடற்படை பிரிவு என்.சி.சி., சார்பில், சுண்ணாம்பாறு படகு இல்ல கடற்கரையில் நேற்று முன்தினம் துாய்மைப் பணி நடந்தது.​

கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் மக்காத இதர பிளாஸ்டிக் கழிவுகள் என, மொத்தம் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மாணவர்கள் சேகரித்து அப்புறப்படுத்தினர். துாய்மைப் பணியில் 40 கடற்படை பிரிவு என்.சி.சி., கேடட்கள், 7 பயிற்சிப் பணியாளர்கள் மற்றும் 2 அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us