ADDED : ஆக 08, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கடலில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கடற்கரை டியூப்ளே சிலை அருகில் நேற்று இரவு 7:30 மணி யளவில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்து. தகவலறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில், இறந்தது யார் என, தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்று பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றனர்.
