தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை வழக்கில் ஜாமினில்   தலைமறைவானவர் கைது 

கொலை வழக்கில் ஜாமினில்   தலைமறைவானவர் கைது 

கொலை வழக்கில் ஜாமினில்   தலைமறைவானவர் கைது 


ADDED : ஜூலை 14, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் முன்னாள் ஊராட்சி தலைவரின் சகோதரர் கொலை வழக்கில் தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர். 

கடலுார், தாழங்குடாவை சேர்ந்தவர் மாசிலாமணி. முன்னாள் ஊராட்சி தலைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மதியழகனுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது.  

இதன் காரணமாக மாசிலாமணி தம்பி மதிவாணனை, கடந்த, 2020ம் ஆண்டு மதியழகன் மற்றும் அவரது தரப்பினர் கொலை செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. படகுகள், மீன்பிடி வலைகளுக்கு தீ வைக்கப்பட்டது. 

இதுகுறித்து கடலுார், தேவனாம்பட்டிணம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து, தாழங்குடா முகிலன், அரசகுமார், 36; உட்பட 20க்கும் மேற்பட்டோரை பேரை கைது செய்தனர். இவ்வழக்கு கடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்– 3ல் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் ஜாமினில் வெளியே வந்த அரசகுமார் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் கோர்ட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் பதுங்கியிருந்த அரசகுமாரை தேவனாம்பட்டிணம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us