ADDED : ஆக 02, 2026 06:10 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பொது இடத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், மீராப்பள்ளி தோட்டம், லயன்கரை பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் கத்தியுடன் சுற்றுவதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்றபோது அவர் தப்பியோட முயன்றார். அவரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், அதேப்பகுதியைச் சேர்ந்த அஜ்மல் அஹமது, 22, என்பது தெரிய வந்தது. அவர் மீது நகர போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் கத்தியை பறிமுதல் செய்தனர்.
