வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 02, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசனம் கோட்டம் சார்பில் வில்லியனுார் தொகுதியில் வாய்க்கால் துார்வாரும் பணியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், ரூ. 16 லட்சம் மதிப்பில் வில்லியனுார் தொகுதி, அரும்பார்த்தபுரம் ஒத்தவாட வீதி பின்புறம் உள்ள ஆத்துவாய்க்கால் மற்றும் வி.மணவெளி பகுதியில் செல்லும் ஊசுட்டேரி பாசன வாய்க்காலை துார் வாரும் பணியை ரவிக்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் ஷாம் பெபியன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.
