ADDED : ஆக 02, 2026 06:01 PM
புதுச்சேரி: தேங்காய்திட்டு, ராமகிருஷ்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில் ராமகிருஷ்ணனின் 119வது பிறந்தநாள், பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் உடற்கல்வி விரிவுரையாளர் சித்ரா ஜோதிமணி வரவேற்றார். முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் பங்கேற்று, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
முன்னதாக, ராமகிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவப்பிரகாசம், ராதாகிருஷ்ணன், குமாரவேல், முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், தலைமை ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சர்வசேத கராத்தே நடுவர் ஜோதிமணி செய்திருந்தார்.
