/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 10 சவரன் நகை திருடிய ஆசாமி கைது
/
டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 10 சவரன் நகை திருடிய ஆசாமி கைது
டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 10 சவரன் நகை திருடிய ஆசாமி கைது
டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 10 சவரன் நகை திருடிய ஆசாமி கைது
ADDED : ஏப் 14, 2024 04:56 AM

புதுச்சேரி: டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, புதுச்சேரி மூதாட்டியிடம் 10 சவரன் நகைகளை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி சாரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் வீராசாமி மனைவி உண்ணாமலை, 65; இவர் கடந்த டிசம்பர் 12ம் தேதி, மடுகரைக்கு செல்ல புதுச்சேரி பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆண் நபர் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, அவருக்கு டீ வாங்கிக் கொடுத்தார். பின்னர் இருவரும் தனியார் பஸ்சில் மடுகரைக்கு புறப்பட்டனர்.
சற்று நேரத்தில் மூதாட்டி மயக்கமடைந்தார். பின்னர் அவர் கண் விழித்தபோது உடன் வந்த நபரை காணவில்லை. மேலும், கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயின் மற்றும் 3 சவரன் வளையல் திருடு போயிருந்தது.
இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், திண்டுக்கல் மாவட்டம், பழநி, சத்யா நகரை சேர்ந்த ராஜா, 46; மூதட்டியிடம் நகைகளை திருடியது தெரிய வந்தது. இவர், தமிழக போலீசாரால் கடந்த 5 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமிநாராயணன், பெரியண்ணசாமி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர், கோயம்புத்துாரில் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 10 சவரன் நகை மற்றும் 100 மயக்க மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரை புதுச்சேரிக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

