ADDED : ஜூலை 15, 2026 06:01 PM
பாகூர்: பாகூரில் ஸ்கூட்டரை, திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அடுத்துள்ள அரியூர் மகாலட்சுமி நகரை சுரேஷ் 38; பெயிண்டர். இவர், கடந்த 9ம் தேதி, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக பத்திரிக்கை வைப்பதற்காக,ஸ்கூட்டரில் கடலுார் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பும் வழியில் விழுப்புரம் – நாகப்பட்டினம் புறவழிச்சாலை பின்னாச்சிக்குப்பம் சந்திப்பில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு அங்குள்ள நிழற்குடையின் ஓய்வு எடுத்த அவர் அசதியில் துாங்கிவிட்டார்.
பின்னர் கண் விழித்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணாமல் அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் பாகூர் பேட் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், 42; ஸ்கூட்டியை திருடியது தெரிய வந்தது.
இதன் பேரில் பாக்யராஜை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் ஸ்கூட்டி திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
