/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
/
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ADDED : ஏப் 06, 2024 06:12 AM

உளுந்துார்பேட்டை : ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாயை இழந்து மனமுடைந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஜெயராமன்,27; டிப்ளமோ முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆன்லைனில் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்ததால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் வண்டிப்பாளையம் வந்திருந்த அவர், நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில், 'தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை' என வாய்ஸ் மெசேஜை பெற்றோருக்கு அனுப்பி விட்டு வண்டிப்பாளையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் ரயில்வே போலீசார் ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.