ADDED : ஏப் 03, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இரவு நேரத்தில் கத்தியுடன் சுற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோரிமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கோரிமேடு வெள்ளவாரி சாலை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர், திலாசுப்பேட்டை வீமன் நகரை சேர்ந்த விஜய், 18, என்பதும், இவர் மீது, திருட்டு, வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

