ADDED : மே 24, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் கத்தியுடன் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் போலீசார் சிக்னல் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையாக சென்றவரை பிடித்து, விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால், போலீசார் அவரை சோதனை செய்ததனர். அதில் அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரித்ததில் சாணரப்பேட்டை சேர்ந்த சிவக்குமார், 39; என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.