/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி
/
பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி
ADDED : ஆக 30, 2024 06:00 AM

புதுச்சேரி: தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடந்த 5 கி.மீ., மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டிபுதுச்சேரி விளையாட்டுமற்றும் இளைஞர்கள் நல இயக்குனரகம் சார்பில் பல்வேறு போட்டிகள்நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 5 மணிக்கு 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 5 கி.மீ., மாரத்தான் போட்டி கடற்கரை சாலையில் நடந்தது. போட்டியை பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி துவக்கி வைத்தார்.
காந்தி சிலை அருகே துவங்கிய மாரத்தான், அஜந்தா சிக்னல், அண்ணாசாலை, புஸ்சி வீதி, கடற்கரை சாலை வழியாக காந்தி சிலையை மீண்டும் அடைந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நல இயக்குனரக துணை இயக்குனர் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

